என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வீடியோ வெளியீடு
நீங்கள் தேடியது "வீடியோ வெளியீடு"
காவலர் ராஜவேலுவை ரவுடிகள் தாக்கியதில் கழுத்தில் வெட்டப்பட்டு அங்கிருந்து தப்பி ஓடிவரும் காட்சிகள் அடங்கிய வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். #ChennaiEncounter
சென்னை:
சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசைப் பகுதியில் ஒரு கும்பல் தகராறில் ஈடுபடுவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ராஜவேலு உடனடியாக அங்கு விரைந்து சென்றார்.
அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் அந்த கும்பல் காவலர் ராஜவேலுவை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதுதொடர்பாக போலீசர் 6 பேர மீது வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது ரவுடி ஆனந்தன் தப்பினார்.
இதற்கிடையே, தப்பிச்சென்ற ரவுடி ஆனந்தனை சென்னை கோட்டூர்புரத்தில் ரவுடி ஆனந்தன் என்பவரை போலீசார் நேற்று இரவு என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். ரவுடிகளை பிடிக்க சென்ற காவலர் மீது தாக்குதல் நடத்தியதால் தான் ரவுடி ஆனந்தனை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றோம் என கூடுதல் ஆணையர் சாரங்கன் தெரிவித்தார்.
இந்நிலையில், காவலர் ராஜவேலுவை ரவுடிகள் தாக்கியதில் கழுத்தில் வெட்டப்பட்டு அங்கிருந்து தப்பி ஓடிவரும் காட்சிகள் அடங்கிய வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ரவுடிகளிடம் வெட்டுப்பட்டதும் அங்கிருந்து தப்பி வரும் காட்சிகள் பதிவாகியுள்ளது. #ChennaiEncounter
காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் விடுமுறையை ஒட்டி வீட்டுக்கு சென்ற போது பயங்கரவாதிகளால் கடத்தி சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. #JammuandKashmir #Aurangzeb #Armymanabducted
ஸ்ரீநகர் :
ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர் அவுரங்சீப். காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தை சேர்ந்தவரான அவுரங்சீப் பல பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அம்மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதி சமீர் டைகர் என்பவன், ராணுவ என்கவுண்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த என்கவுன்டரை நடத்தியவர்களில் கடத்தப்பட்ட்ட அவுரங்கசீப்பும் ஒருவர்.
விடுமுறைக்காக வீட்டிற்கு சென்ற இவரை நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிமுனையில் கடத்தி சென்றனர். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அவுரங்சீப்பின் உடலை புல்வாமா மாவட்டத்தின் குசோ பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவரை சுட்டுக்கொல்வதற்கு முன்பாக எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், அவுரங்சீப் பங்குபெற்ற பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடத்தி சென்றவர்கள் விசாரித்துள்ளனர்.
1.15 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது. அவுரங்கசீப்பை கடத்தி சென்றவர்கள் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. #JammuandKashmir #Aurangzeb #Armymanabducted
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X